KOZHAI - TAMIL RAP - SujeethG's Raavannan - Video
PUBLISHED:  Jan 04, 2011
DESCRIPTION:
Song: Kozhai
Artist: SujeethG
Lyrics: SujeethG
Music: Santhors

https://www.facebook.com/SujeethG
SujeethG's Raavannan out on the 14th Jan 2011.

பெண்கள் பெயர் கொல்ல கதைகள் வளர்த்தாய்
பெண்ணின் உணர்வுகளை ஏறி மிதித்தாய்
பெண்ணை வெல்ல பல பொய்கள் உரைத்தாய்
- கோழை
அன்புத் தாயவளும் பெண்ணே மறந்தாய்
அக்கா தங்கை அவை யாவும் மறந்தாய்
பெண்ணை வெல்லுவது வீரம் அளந்தாய்
- கோழை
---
நினைப்பில நீயொரு ஆம்பிள சிங்கம்
நிஜத்தில உனக்குள்ள முழுதும் அசிங்கம்
வாழ்வின் பெறுமதி உனக்குத் தெரியாது
வாழ்வு பெருநதி உனக்குப் புரியாது
நிழலதை நிஜமெனக் கதைகள் அளந்தாய்
கழிசறைப் பெண்ணெனப் பொய்கள் புனைந்தாய்
நாளுக்கு நாளென துன்பம் கொடுத்தாய் - நீ
சாகிற வரைக்கவர் இன்பம் அழித்தாய்
பெண்கள் தெய்வமடா உனக்குத் தெரியாது
அணைக்கும் அழிக்குமடா உனக்குப் புரியாது
ஆம்பிளை நானேன நெஞ்ச நிமித்தாதே
பொம்பிளப் பாவத்தை வாழ்வில் சுமக்காதே
---
பூமி உருண்டை போல, வாழ்க்கை வட்டம்
நீ எங்கு ஓடினாலும் வந்து முட்டும்
இளைய வயதினில அடித்த கொட்டம் - உனை
ஐம்பதிலும் வந்து தேடி வெட்டும்
பொய்யும் வதந்தியும் உன் மகளைப் பிடிக்க - அவள்
வாடி அழ உனது இதயம் வலிக்க - நீ
அன்று செய்த பாவம் வந்து சிரிக்க
வேண்டாம் திருந்திவிடு வாழ்க்கை வெளிக்க
பெண்ணின் உலகமதை உணரப்பழகு
பெண்ணின் உணர்வுகளை மதிக்கப்பழகு
பெண்ணைப் பெண்iணாக நடத்தப்பழகு - நீ
மொத்த மனிசனா வாழப்பழகு
follow us on Twitter      Contact      Privacy Policy      Terms of Service
Copyright © BANDMINE // All Right Reserved
Return to top